உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்

மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்

மாநகரில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்ஈரோடு:ஈரோட்டில் வாழும் ஜெயின் சமுதாயத்தினர், மகாவீர் பிறந்தநாளான நேற்று, மகாவீர் ஜெயந்தியை உற்சாகமாக கொண்டாடினர். ஈரோடு இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலுக்கு குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு நடத்தினர். அதன்பின் ஜெயின் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றனர். லட்சுமி நாராயண வீதி, காவேரி சாலை, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, மண்டப வீதி வழியாக மீண்டும் இந்திரா நகர் ஜெயின் கோவிலில் நிறைவு செய்தனர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் சென்ற ஜெயின் சமூகத்தினர் சிலர் கூறுகையில், 'சமண சமயத்தின், 24வது தீர்த்தங்கரராகிய மகாவீரரின் பிறந்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். அகிம்சையே தர்மம், எந்த ஜீவனையும் கொல்லக்கூடாது, எவரையும் சார்ந்திருக்க கூடாது, எவரையும் அடிமைப்படுத்தக்கூடாது போன்ற மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவ கொள்கையை தெரியப்படுத்தும் வகையில் ஊர்வலம் சென்றோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை