உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்

என்.எம்.எம்.எஸ்., தேர்வில்அரசுப்பள்ளி மாணவி முதலிடம்புன்செய்புளியம்பட்டி:எட்டாம் வகுப்பு படிக்கும் தனியார் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) நடந்தது. சில நாட்களுக்கு முன் முடிவு வெளியானது. இதில் பவானிசாகர் கோடேபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 17 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவி இனியா, 147 மதிப்பெண் பெற்று ஈரோடு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவர்களை, தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ