மேலும் செய்திகள்
ரோட்ராக்ட் கிளப் நிர்வாகிகள் தேர்வு
20-Sep-2025
பெருந்துறை, பெருந்துறை டிராபிக் போலீஸ் ஸ்டேஷன், பெருந்துறை ரோட்டரி கிளப் மற்றும் பெருந்துறை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, என்.சி.சி., மாணவர்கள் இணைந்து, ெஹல்மெட் விழிப்புணர்வு பிரசாரத்தில், பெருந்துறை-குன்னத்தூர் நால்ரோட்டில் மேற்கொண்டனர். டிராபிக் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி கிளப் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் போல் என்.சி.சி., மாணவர்கள் வேடஅணிந்து ெஹல்மெட் அணிவது பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகம் செய்தனர். ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சாக்லேட் கொடுத்தனர்.ரோட்டரி கிளப் செயலாளர் கருப்புசாமி, பள்ளி தலைமையாசிரியர் பிருந்தா ஸ்வீட் செல்வகுமாரி, பெருந்துறை டவுன் பஞ்., முன்னாள் தலைவர் பல்லவி பரமசிவம், எஸ்.ஐ.,க்கள், போலீசார் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர்கள், சித்தா மருத்தவர் சக்திவேல், செல்வகுமார் மற்றும் கிளப் துணை செயலாளர் நந்தகுமார், துணை பொருளாளர் குழந்தைசாமி செய்தனர். என்.சி.சி., மாணவர் படை ஆசிரியர் வினோத் நன்றி கூறினார்.
20-Sep-2025