மேலும் செய்திகள்
வனப்பகுதியில் குப்பை கொட்டியவருக்கு 'பைன்'
03-Oct-2025
அந்தியூர், அந்தியூர் வன சரகத்துக்குட்பட்ட வரட்டுப்பள்ளம் அணை, 'வியூ' பாயின்ட் வனப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, சில நாட்களுக்கு முன்பு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து இன்ஸ்டராகிராமில் வெளியிட்ட நபரை, வனத்துறையினர் தேடி வந்தனர்.இந்நிலையில், வீடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி மகன் சக்திவேல், 23, ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த சக்திவேல் மகன் மனோஜ், 22, என்பது தெரிந்தது. குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கும், மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவுப்படி, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
03-Oct-2025