உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / -வனத்துறை அலுவலகம் முற்றுகை

-வனத்துறை அலுவலகம் முற்றுகை

சத்தியமங்கலம், ந ஈரோடு மாவட்டம், கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம் பகுதிகளில் ஆடு, மாடு, மேய்க்க லஞ்சம் வாங்கும் வனத்துறையினரை கண்டித்து, சத்தி டி.எப்.ஓ., அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர்.நா.த.க., ஒருங்கிணைப்பாளர் அய்யப்பன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள மலை கிராம மக்கள் ஆடு, மாடுகளை மேய்க்க, வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர். சில அதிகாரிகள், மலை கிராம மக்களை மிரட்டி லஞ்சம் வசூலிக்கின்றனர். மலை கிராம பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாமல் இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது என கண்டன கோஷம் எழுப்பினர். பின்பு கோரிக்கை மனுவை வனத்துறை அலுவலகத்தில் கொடுத்தனர்.அரிசி வியாபாரி விபரீத முடிவுகோபி, நவ. 20கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 49. இவர் அரிசி வியாபாரம், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவருக்கு திலகமணி, 44, என்ற மனைவி, இரு மகன்களும் உள்ளனர். கடந்த இரு ஆண்டுகலாக மனநலம் பாதித்ததால், தொழிலை சரியாக செய்ய முடியாமல் சரவணனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையில் இருந்த அவர், நேற்று அதிகாலை 5:45 மணிக்கு மாட்டு தொழுவத்தில் துாக்கிட்டு கொண்டார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி திலகமணி கொடுத்த புகார்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை