உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவியிடம் தகராறு தொழிலாளி விபரீதம்

மனைவியிடம் தகராறு தொழிலாளி விபரீதம்

சென்னிமலை:-விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன், 38; கரும்பு வெட்டும் தொழிலாளி. முதல் மனைவி பிரிந்து சென்றதால், மஞ்சுளா என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். சென்னிமலை பகுதியில் ஒரு கரும்பு தோட்டத்தில் இரண்டு மாதங்களாக தங்கி, எழுமாத்துார் சர்க்கரை ஆலைக்காக கரும்பு வெட்டும் பணியில் மனைவியுடன் ஈடுபட்டிருந்தார். கரும்பு வெட்டும் இடத்தில் கணவன், மனைவி இடையே நேற்று மாலை வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முருகன், அரளி விதைகளை தின்று விட்டார். உயிருக்கு போராடியவரை சக தொழிலாளர்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதுகுறித்து சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை