உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் வாக்குவாதம்

நகராட்சி அதிகாரிகளுடன் கவுன்சிலர் வாக்குவாதம்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நகராட்சி பராமரிப்பில் உள்ள சேதமான கழிப்பிடத்தை பராமரிப்பு செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அதையொட்டி இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விட்டது. சுவரை கட்டும் பணியில் தொழிலாளர்கள் இரு நாட்களாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சத்தி நகராட்சி, 23வது வார்டு கவுன்சிலரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான அரவிந்த்சாகர், அவரது குடும்பத்தினருடன் வந்தார்.சம்பவ இடத்தில் தங்களுக்கு சொந்தமான இடத்தில், 5 அடி ஆக்கிரமிப்பு செய்து சுற்றுச்சுவர் கட்டுவதாகவும், இடத்தை அளவீடு செய்த பிறகு கட்டுமாறும், தற்போது பணியை நிறுத்தி வைக்குமாறு நகராட்சி அதிகாரிகளிடம் கூறினர். ஏற்கனவே சுவர் கட்டப்பட்ட இடத்தில் தான் கட்டப்படுகிறது. பணி முடியும் தருவாயில் உள்ளது. இப்போது எப்படி நிறுத்த முடியும்? என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.அப்போது நகராட்சி அதிகாரிகளுக்கும், அரவிந்த்சாகருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தி போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, சிவில் பிரச்னை என்பதால் நீதிமன்றத்தை நாடி தீர்வு காணுமாறு கூறினர். இதையடுத்து கவுன்சிலர், குடும்பத்தினருடன் அங்கிருந்து சென்றார். இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி