வாலிபர் உடல் மீட்பு
வாலிபர் உடல் மீட்புகோபி, நவ. 2-கோபி அருகே குருமந்துார் மேடு என்ற இடத்தில், கீழ்பவானி வாய்க்காலில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதப்பதாக கடத்துார் போலீசாருக்கு தகவல் சென்றது. நேற்று காலை சென்ற போலீசார், நம்பியூர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு, பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோபி அருகே எலத்துாரை சேர்ந்த சிவக்குமார், 31, என தெரிந்தது. வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.