தனியார் பள்ளிக்குநோட்டீஸ்
தனியார் பள்ளிக்குநோட்டீஸ்ஈரோடு:ஈரோட்டை அடுத்த நசியனுாரில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. தொடர் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படுவதாக கூறி, பள்ளி கல்வித்துறையினர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.இதுபற்றி பள்ளி கல்வி துறையினர் (தனியார் பள்ளிகள் பிரிவு) கூறியதாவது:பள்ளி நடத்த அங்கீகாரம் வாங்கியுள்ளனர். ஆனால் தொடர் அங்கீகாரம் வாங்க வேண்டும். கடந்த சில ஆண்டாக தொடர் அங்கீகாரம் வாங்காமல் பள்ளியை நடத்துகின்றனர். இதனால் பள்ளி நிர்வாகத்துக்கு, 15 நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கி உள்ளோம். மேலும், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகை தராமலும், ஒப்பந்தமும் போடாமல் உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் புகார் அளித்துள்ளனர். இதுபற்றியும் பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.