உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., பொதுக்குழு கூட்டம்

பா.ம.க., பொதுக்குழு கூட்டம்ஈரோடு:ஈரோடு மாநகர மாவட்ட பா.ம.க., பொதுக்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் ராஜூ தலைமையில் நேற்று நடந்தது. வன்னியர் சங்க மாநாடு மே, 11ல் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில் அதிகளவில் தொண்டர்களை பங்கேற்க செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி, ஈரோடு மாவட்ட மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் கூட்டத்தில் பேசினர். மாநகர மாவட்ட தலைவர் பிரபு, மாநில துணை தலைவர் பரமசிவம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி தலைவர் தினேஷ், மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல் பா.ம.க., சார்பில் பவானியில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜகதீஸ் தலைமை வகித்தார். நகர செயலாளர் தினேஷ்குமார், சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான கார்த்தி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !