உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மருமகனை தாக்கியமாமனாருக்கு காப்பு

மருமகனை தாக்கியமாமனாருக்கு காப்பு

மருமகனை தாக்கியமாமனாருக்கு 'காப்பு'நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி வீரன் மகன் ரகுபதி, 50; இவரது மகள் பிரியங்கா, 20; கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த சீரங்கன் மகன் அருள், 22, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு ரகுபதி எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த, ஐந்து மாதங்களாக பிரியங்கா வீட்டிற்கு செல்லவில்லை. இந்நிலையில், நேற்று காலை தன் கணவருடன் பிரியங்கா வீட்டிற்கு சென்றார். அப்போது, ரகுபதிக்கும், அருளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரகுபதி சரமாரியாக அருளை தாக்கியுள்ளார். காயமடைந்த அருள், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அருள் கொடுத்த புகார்படி, ஆயில்பட்டி போலீசார் ரகுபதியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ