உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உலக வன நாள்விழிப்புணர்வு

உலக வன நாள்விழிப்புணர்வு

உலக வன நாள்விழிப்புணர்வுஅந்தியூர்:உலக வனநாளை முன்னிட்டு, காடுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. அந்தியூர் வனவர் முருகேசன் தலைமை வகித்தார். தனியார் தொண்டு நிறுவன செயலாளர் கவுசல்யா, காடுகளின் அவசியம், பயன்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து பேசினார்.தொடர்ந்து வனச்சரக அலுவலகத்தில் மரக்கன்று நடப்பட்டது. பாரஸ்டர் ஈஸ்வரமூர்த்தி, சிவராஜ், வன காப்பாளர் பழனி, தர்மலிங்கம், ஹேமா மற்றும், டி.என்.பாளையம் தனியார் கல்லுாரி மாணவர்கள், அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ