உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனு

புறவழிச்சாலையில்மாற்றம் கோரி மனுஈரோடு:சென்னிமலை அருகே பசுவப்பட்டி, தட்டாங்காடு பகுதி மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது: பசுவப்பட்டி பஞ்., தட்டாங்காடு கிராமத்தில் வசிக்கிறோம். சென்னிமலை நகரின் போக்குவரத்து நெரிசலுக்காக பெருந்துறை - காங்கேயம் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும்படி புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. பிடாரியூரில் இருந்து பிரிந்து பசுவப்பட்டி பிரிவில் இணைகிறது. இணைக்கப்படும் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதே பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் அதிகமாக உள்ளதால், சாலையை அப்பகுதிக்கு மாற்றி அமைத்தால் எங்களது குடியிருப்பு, கடை பாதிக்காது. குடியிருப்பு வழியாக சாலையை அமைக்காமல், மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ