மகள் மாயம்தந்தை புகார்
மகள் மாயம்தந்தை புகார்பவானி:அம்மாபேட்டை அருகே முகாசிப்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 45; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின், 16 வயது மகள் நேற்று முன்தினம் காலை பொது கழிப்பறைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை.இதனால் ஏமாற்றமடைந்த கந்தசாமி அளித்த புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார், மாயமான அவரது மகளை தேடி வருகின்றனர்.