உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

அந்தியூர், அந்தியூர், அம்மாபேட்டையை அடுத்த முகாசிப்புதுரை சேர்ந்த ராமசாமி மகள் ஹர்ஷினி, 15; அந்தியூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில், ௧௦ம் வகுப்பு படிக்கிறார். நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு, அரசு பஸ்சில் சென்றார். மதிய உணவு இடைவேளையில், அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஹர்ஷினியின் சகோதரி யாழினி, தங்கையை பார்க்க சென்றார். பள்ளிக்கு வரவில்லை என சக மாணவியர் கூறினர். இதனால் தந்தையை தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசு டவுன் பஸ்சில் ஏற்றி விட்டதாக தெரிவித்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி, அந்தியூர் போலீசில் புகாரளித்தார். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்தியூர் பஸ் ஸ்டாண்டில் மாணவி இறங்கி சென்றது தெரிய வந்தது. மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை