உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்கிகள் ஸ்டிரைக்கால் மாவட்டத்தில்ரூ.2,400 கோடி பரிவர்த்தனை முடங்கும்

வங்கிகள் ஸ்டிரைக்கால் மாவட்டத்தில்ரூ.2,400 கோடி பரிவர்த்தனை முடங்கும்

வங்கிகள் ஸ்டிரைக்கால் மாவட்டத்தில்ரூ.2,400 கோடி பரிவர்த்தனை முடங்கும்ஈரோடு:வங்கி ஊழியர், அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தால், ஈரோடு மாவட்டத்தில், 2,400 கோடி ரூபாய்க்கு வங்கி பண பரிவர்த்தனை முடங்கும் என வங்கி ஊழியர் சங்க நிர்வாகி தெரிவித்தார்.இதுபற்றி ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் நரசிம்மன் கூறியதாவது: வங்கியில் உள்ள நிரந்தர பணிகளை வெளியாட்களிடம் ஒப்படைக்க கூடாது. வங்கி துறையில் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 24, 25ல் வங்கிகள் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய வங்கிகளை சேர்ந்த, 2,600 ஊழியர்கள் ஈடுபடுவர். மாவட்டத்தில் சராசரியாக தினமும், 1,200 கோடிக்கு தேசிய வங்கிகளில் பண பரிவர்த்தனை நடக்கிறது. வேலை நிறுத்தத்தால் இரு தினங்களில், 2,400 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் முடங்கும். ஸ்டிரைக்கில் எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், பி.பி.எஸ்., - சி.யு.பி., போன்ற வங்கிகள் பங்கேற்காது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை