மேலும் செய்திகள்
'அதிகாரி' ஆன டிரைவர்; அடங்காத லஞ்சக் கயவர்!
13-Aug-2024
ஈரோடு, செப். 8-போலீஸ் இன்ஸ்பெக்டரின் 'வாக்கி-டாக்கி' தொலைந்த விவகாரத்தில், நீண்ட இழுபறிக்கு பின், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் திருஞான சம்பந்தம். இவருக்கு வழங்கப்பட்ட 'வாக்கி-டாக்கி', 20 நாட்களுக்கு முன் தொலைத்து விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதேசமயம் இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் புகாரும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து நாளிதழில் செய்தி வந்த பிறகே, மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் அறிவுறுத்தலின்படி 'வாக்கி-டாக்கி' மாயமானது தொடர்பாக இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்படி, மலையம்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேசமயம் இந்த விவகாரத்தில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
13-Aug-2024