உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே வி.ஏ.ஓ.,க்களுக்கு மாநில தலைவர் உறுதி

நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே வி.ஏ.ஓ.,க்களுக்கு மாநில தலைவர் உறுதி

கோபி, ஆக. 25-தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர் சங்கத்தின், மாநில செயற்குழு கூட்டம் கோபியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜான் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் நல்லாகவுண்டன் பேசினார். மாநில செயற்குழு கூட்டத்தில், பிற மாவட்டங்களை சேர்ந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.இதில் பங்கேற்ற மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது: தமிழகம் முழுவதும், நகர நில அளவை முழுப்புல பட்டா மாறுதலுக்கான 'லாக் இன்' வசதியை வி.ஓ.ஓ.,வுக்கு வழங்க வேண்டும். மேலும் பிற மாநிலங்களில் டிஜிட்டல் கிராப் சர்வே முறை எவ்வாறு உள்ளதோ, அவ்வாறு தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களை தனித்துறையாக அறிவித்து, அவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். உதவி வேளாண் அலுவலர்களுக்கு அளிப்பது போல் பயணப்படி இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் நேர்மையாக செயல்படும், வி.ஏ.ஓ.,க்கள் மீது மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்புமின்றி, நடவடிக்கை எடுப்பதை நிறுத்த வேண்டும். சிறப்பாக பணியாற்றும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்பதில், மாநில மையம் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ