மாநகராட்சி பூங்காவில் ஆய்வு
ஈரோடு, ஆக. 30-ஈரோடு மாநகராட்சி மூன்றாவது வார்டு சூரியம்பாளையத்தில், மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான பூங்கா உள்ளது. கடந்த சில மாதங்களாக பராமரிப்பின்றி, விஷ ஜந்துக்களின் வாழ்விடமாக பூங்கா மாறி விட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர். பூங்காவை பராமரிக்கவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் ஆணையாளர் மனிஷ், பூங்காவில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். பூங்காவில் மண்டிக்கிடந்த புதர்களை அகற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.