மேலும் செய்திகள்
வாலிபரிடம் நகை பறிப்பு கல்லுாரி மாணவர் கைது
17-Aug-2024
பவானி, செப். 8-பவானி மார்க்கெட் வீதியை சேர்ந்தவர் வசந்தகுமார், 28, கூலி தொழிலாளி. அம்மாபேட்டை அருகே பி.கே.புதுாரில் தாத்தா வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியில் தனக்கு பழக்கமான ஒரு பெண்ணை பார்க்க நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டுக்கு சென்றார். பெண்ணின், 16 வயது மகள் கட்டிலில் துாங்கி கொண்டிருந்தார். சிறுமிக்கு முத்தம் கொடுக்க முயன்றபோது அவர் விழித்து சத்தம் போட்டுள்ளார். இதைக்கேட்டு வந்த சிறுமியின் தாய், வசந்தகுமாரை கண்டித்துள்ளார். அப்போது சிறு கத்தியால் கீறியதில், பெண்ணின் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் வந்தனர். இதனால் வசந்தகுமார் ஓட்டம் பிடித்தார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், அம்மாபேட்டை போலீசார் வசந்தகுமார் மீது, கொலை மிரட்டல் மற்றும் போக்சோ வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
17-Aug-2024