அனுமதி மறுப்பால் விசர்ஜன ஊர்வலம் தாமதம்
ஈரோடு: ஈரோட்டில் போலீசார் அனுமதி மறுப்பால், ஒரு மணி நேரம் தாம-தமாக விநாயகர் சிலை ஊர்வலம் துவங்கியது.ஈரோட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 144 சிலைகள் கடந்த, ௭ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று இந்த சிலைகளை கரைக்கும் பணி நடந்தது. முன்னதாக ஈரோடு சம்பத் நகரில் சிலைகள் ஒன்றிணைக்கப்பட்டன. 10 அடி வீர விநாயகர் முன் செல்ல பிற சிலைகள் பின் தொடர்ந்தன. ஊர்வலத்துக்கு நர-சிம்மர் மற்றும் விஷ்ணு சிலை தாங்கிய வாகனம் வந்தது.அந்த வாகனத்தை போலீசார் தடுத்து, அனுமதியின்றி வரும் வாக-னங்களுக்கு அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனால் மாலை, 5:00 மணிக்கு கிளம்புவதாக இருந்த ஊர்வலம் தாமதமா-னது. அந்த வாகனத்தை அனுமதித்தால்தான் ஊர்வலம் செல்லும் என இந்து முன்னணியினர் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்-பட்டது. தகவலறிந்து வந்த வருவாய் துறையினர், இந்து முன்னணியின-ருடன் பேச்சு நடத்தினர். நரசிம்மர் மற்றும் விஷ்ணு உருவம் தாங்-கிய வாகனத்தில், விநாயகர் சிலை வைத்து கொள்ளவும், அனைத்து விநாயகர் சிலைகளுக்கும் முன்னதாக அந்த வாகனம் செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.இதை இருதரப்பினரும் ஏற்றதால், 6:10 மணிக்கு ஊர்வலம் துவங்-கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஊர்வலம் நிறைவ-டைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.முன்னதாக ஊர்வலத்தில் தமிழக பா.ஜ., மாநில செயலாளர் அஸ்-வத்தாமன் எழுச்சியுரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன், பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் வேதானந்தம், இந்து முன்னணி மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பொது செய-லாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.