உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலையில் அதிக பார வாகனங்களை தடுக்க வே பிரிட்ஜ்; கலெக்டர் தகவல்

பர்கூர் மலையில் அதிக பார வாகனங்களை தடுக்க வே பிரிட்ஜ்; கலெக்டர் தகவல்

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில், வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கூட்ட விவாதம் வருமாறு:* தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் சுதந்திரராசு: கடந்த, 2018ல் பயிர் காப்பீடு செய்து பயிர் பாதித்தோருக்கே இழப்பீடு வரவில்லை. ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் வழங்குங்கள். மரவள்ளி கிழங்கு டன், 10,500 முதல், 11,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது, 7,500 ரூபாயாகிவிட்டது. முத்தரப்பு கூட்டம் நடத்தி, 10,000 ரூபாயாக விலை நிர்ணயிக்க வேண்டும். * மலைப்பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தில் கல் வரப்பு, மண் வரப்பு அமைத்தல், வாய்க்கால் உள்ளிட்ட நீர் நிலைகள் துார்வாருதல் பணி வழங்க வேண்டும். திம்பம் சாலையில் கட்-டுப்பாடு உள்ளதால், பர்கூர் சாலையை அதிக பாரமுள்ள வாக-னங்கள் பயன்படுத்துவதால், சாலைகள் பழுதாகிறது. குன்றுக-ளில்தான் நரியும், அவை உண்ணும் மயிலும் வாழ்கிறது. சமீப-மாக குன்றுகளை அழிப்பதை தடுக்க வேண்டும்.* ஊரக வளர்ச்சி துறை அதிகாரி: 5 ஆண்டுக்கு முன் துார்வாரிய நீர் நிலைகளை துார்வாரலாம். அதன்படி சத்தி யூனியனில், 3 பணிக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பிற யூனியனிலும், 5 ஆண்டுக்கு முன் துார்வாரிய நீர் நிலை விபரம் கேட்டுள்ளோம். 100 நாள் வேலை திட்டத்தில் பிற பணிகளாக, பண்ணை குட்டை, குட்டை, மரக்கன்று நடுதல், விளையாட்டு திடல் அமைத்தல் போன்ற பணிகளில் வேலை வழங்குகிறோம்.* கலெக்டர்: நுாறு நாள் வேலை திட்டத்தில் ஆண்டுக்கு, 266 வித பணிகளை மேற்கொள்ளலாம். வேளாண் துறையில், 150 பணி, மேம்பாட்டு பணியாக, 58 என உள்ளது. அதன் பட்டியல் தருகிறோம். தகுதியான பணிகளை தெரிவித்தால், 100 நாள் வேலை திட்டத்தில் செயல்படுத்தலாம். பர்கூர் சாலையில் அதிக பாரமுள்ள வாகனம் செல்வதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 'வே பிரிட்ஜ்' அமைத்துள்ளனர். அதுபற்றி கேட்டுள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ