மேலும் செய்திகள்
மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்..
25-Jul-2025
ஈரோடு, தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கம் சார்பில், ஈரோடு, திண்டலில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட செயலர் மணிவண்ணன் தலைமை வகித்தார். மாநில பொது செயலர் சண்முகம் கோரிக்கை குறித்து பேசினார்.மாநில அளவில் காலியாக உள்ள, 700 மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். மாநில அளவில், 385 வட்டார, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். 110 தாலுகா, மற்றும் தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தியல் பணிக்கு தொடர்பில்லாத பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25-Jul-2025