மேலும் செய்திகள்
ஆதிபராசக்தி மன்றத்தின் கஞ்சிக்கலைய ஊர்வலம்
09-Aug-2025
பவானிசாகர்: பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து மாலையில் ஆதிபராசக்தி உருவப்படத்துடன், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் பால்குடம், கஞ்சிக்கலயத்தை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய சாலைகளின் வழியாக கோவிலை அடைந்தது.
09-Aug-2025