உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் சாவித்திரி தலைமையில் கருப்பு கொடியேந்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து, நிர்வாகிகள் ராஜூ, சுப்பிரமணி, தங்கமணி உட்பட பலர் பேசினர். மத்திய அரசு போல் மாதாந்திர உதவித்தொகையை, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குடும்பத்துக்கு, 35 கிலோ உணவு தானியம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புகளை முடக்கும் புதிய அரசாணைகளை வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே இருந்தபடி மாநில அளவில் குறைதீர் கூட்டத்தை வருவாய் நிர்வாக ஆணையரை வைத்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை