உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 185 டன் யூரியா, 5 லாரி பறிமுதல்கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கினார்

185 டன் யூரியா, 5 லாரி பறிமுதல்கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கினார்

185 டன் யூரியா, 5 லாரி பறிமுதல்கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கினார்ஈரோடு:மானிய விலை யூரியாவை, கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற ஒருவரை கைது செய்து, 185 டன் யூரியாவை, அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மத்திய அரசு மானியத்தொகை வழங்கி, விவசாய பயன்பாட்டுக்கான யூரியாவை வேப்பம்புண்ணாக்கு கலந்து விற்பனை செய்கிறது. இதை ஆலை பயன்பாடு, பிற பயன்பாட்டுக்கு விற்பனை செய்வதாக, ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு, வேளாண் துறைக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து டி.எஸ்.பி., வடிவேல் தலைமையிலானவர்கள், சித்தோடு அருகே பேரோடு, மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட யூரியாவை கண்டறிந்தனர். பவானி, பசுவேஸ்வரர் வீதி அகம்மது அலி, 54, இவற்றை கடத்தி, வேறு பயன்பாட்டுக்கு விற்க முயன்றது தெரியவந்தது. கடந்த ஆறு மாதங்களாக விற்பனை நடந்து வந்துள்ளது.குடோனில் இருந்த, 93.22 டன் யூரியா, கடத்தலுக்கு பயன்படுத்தவிருந்த, 2 லாரிகளை பறிமுதல் செய்து, அகம்மது அலியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, வேறிடத்தில் மூன்று லாரிகளுடன், 91.8 டன் யூரியாவை பறிமுதல் செய்தனர். மொத்தம் ஐந்து லாரிகள், 185 டன் யூரியா கைப்பற்றப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி