உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலந்தாய்வில் 501 ஆசிரியர்கள்

கலந்தாய்வில் 501 ஆசிரியர்கள்

ஈரோடு:ஈரோடு மாவட்ட மேல்நிலை பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு நேற்று நடந்தது. மாவட்டத்துக்குள் பணியிட மாறுதல் பெறுவதற்கு நேற்று வாய்ப்பு வழங்கப்பட்டது.மாவட்டத்தில் மொத்தமுள்ள, 50 காலி பணியிடங்களுக்கு, 501 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கோரி விண்ணப்பித்து இருந்தனர். மாவட்டத்துக்குள் என்பதால் ஆன்லைனில் இல்லாமல் விரும்பிய பணியிடங்களை ஆசிரியர்கள் கேட்டனர். பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டது. முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு அதற்கான உத்தரவுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !