உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 90 ஆசிரியர்கள் இடமாற்றம்

90 ஆசிரியர்கள் இடமாற்றம்

ஈரோடு, ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியர்கள், வருவாய் மாவட்டத்திற்குள், 90 பேர் பணியிட மாற்ற உத்தரவு பெற்றனர். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் பட்டதாரி ஆசிரியர், வருவாய் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 441 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழ்-15, ஆங்கிலம்-14, கணிதம்-11, அறிவியல்-34, சமூக அறிவியல்-16 பேர் என, 90 பேர் புதிய பணியிடங்களை பெற்றனர். இவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, ஆணை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !