உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆடி மாதப்பிறப்பு: கொடிவேரி தடுப்பணை வெறிச்

ஆடி மாதப்பிறப்பு: கொடிவேரி தடுப்பணை வெறிச்

கோபி: ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, குறைந்த சுற்றுலா பயணிகளே வருகை தந்ததால், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.ஆடி மாதம் பிறந்தாலே, புதுமண தம்பதியினர், முக்கிய நீர்நிலை-களில், புனித நீராடி கோவிலுக்கு செல்வர். அதன்படி, ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரி தடுப் பணையில், வழக்க-மாக ஆடி மாதப்பிறப்பு நாளில், மக்கள் கூட்டம் களைகட்டும். ஆனால், நேற்று காலை முதல் குறைந்த சுற்றுலா பயணிகளே தடுப்பணைக்கு வந்தனர். வழக்கமாக ஆடிப்பிறப்பு நாளில், கொடிவேரி தடுப்பணைக்கு, 5,000 சுற்றுலா பயணிகள் வரை வருவர்.ஆனால், நேற்று ஆயிரத்துக்கு உட்பட்டோர் மட்டுமே வந்திருந்-தனர். இதனால், அதன் வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்-டது. இனி அடுத்து வரும் ஆடிப்பெருக்கு நாளில் சுற்றுலா பய-ணிகள் கூட்டம் களைகட்டும் என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை