உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையில் சரிந்த கம்பத்தால் பகீர்

சாலையில் சரிந்த கம்பத்தால் பகீர்

டி.என்.பாளையம்;டி.என்.பாளையம், கள்ளிப்பட்டி அருகே பெருமுகை ஊராட்சி ஏரங்காட்டூர் சாலையில், ஒரு மின் கம்பம் சாலையில் நேற்று சாய்ந்து கிடந்தது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கள்ளிப்பட்டி மின்வாரிய பொறியாளர் அலுவலகத்துக்கு தகவல் தந்தனர். இதையடுத்து அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. சாலையில் சாய்ந்து விழுந்த கம்பம், பழைய கம்பம் எனவும், அரிப்பு ஏற்பட்டு சாய்ந்து விட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற மின் ஊழியர்களின் துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை