உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.52 ஆயிரத்துக்கு பாக்கு விற்பனை

ரூ.52 ஆயிரத்துக்கு பாக்கு விற்பனை

பவானி: பவானி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று பாக்கு ஏலம் நடந்தது. இதில், 239 கிலோ பாக்கு வரத்தானது. ஆப்பி பாக்கு ரகம் கிலோ, 300 ரூபாய் முதல் 400 ரூபாய்; சாலி பாக்கு கிலோ, 300 ரூபாய் முதல் 330 ரூபாய், காய்ந்த பாக்கு, 137 ரூபாய் முதல் 143 ரூபாய் வரை, 52 ஆயிரம் ரூபாய்க்கு பாக்கு ஏலம் போனது.காப்புக்காட்டில் திடீர் தீசென்னிமலை: சென்னிமலை-காங்கேயம் சாலையில் கணுவாய் அருகே வனப்-பகுதியை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் வறண்ட செடி, கொடி-களில் நேற்று மதியம், 2:30 மணி அளவில் திடீரென தீப்பிடித்-தது. சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.வாகனம் செல்ல இயலாத பகுதியில் வீரர்கள் நடந்து சென்று இலை, தழைகளை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அணைக்காத பீடி, சிகரெட்டால் தீப்பிடித்-திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த காப்புக்காட்டில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. வனத்துறையினர் ரோந்து செல்ல அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி