| ADDED : ஜூலை 14, 2024 03:06 PM
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவானி கூடுதுறை சந்திப்பு அருகே, நேற்று முன்தினம் மாலை, பவானி போக்குவரத்து போலீசார் பிரபு, 28, சிவக்குமார், 30, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 'ஈச்சர்' வேனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா இருந்தது தெரியவந்தது.உடன், தன் நண்பர்கள் இருவர் வாயிலாக வெப்படைக்கு வேனை அனுப்பி வைத்தனர். அங்கு ஒரு வீட்டில் இறக்கி வைத்து, வேனை எடுத்து செல்லுமாறு தெரிவித்துள்ளனர். வேன் டிரைவர் ராஜேந்திரன், ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் தெரிவித்தார்.அவரது உத்தரவின்படி, பவானி டி.எஸ்.பி., அமிர்தவர்ஷினி தலைமையிலான போலீசார், இரு போலீசாரிடமும் விசாரித்தனர். வெப்படையில் வீட்டில் பதுக்கி வைத்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, பவானி ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். அதன் மதிப்பு, 8 லட்சம் ரூபாய்.குட்கா பதுக்கிய போலீசார் இருவரையும், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, எஸ்.பி., ஜவகர் நேற்று உத்தரவிட்டார். இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.