உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலை கொங்கு பள்ளி மாணவி சாதனை

சென்னிமலை கொங்கு பள்ளி மாணவி சாதனை

சென்னிமலை;-சென்னிமலை கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவி அனுஸ்ரீ, தேசிய அளவிலான தட்டு எறிதல் போட்டியில் சாதனை படைத்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிலாஷ்பூரில் நடந்த போட்டியில், 42.73 மீட்டர் துாரம் எறிந்து முதலிடம் பெற்று தங்கம் வென்றார். சாதனை படைத்த மாணவிக்கு பள்ளி அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, பள்ளி தாளாளர் மணி, பொருளாளர் தங்கமுத்து பரிசு வழங்கி பாரட்டினர். உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மனோஜ், பிரியா, பள்ளி முதல்வர் முத்துகருப்பன் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை