உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஜி.எச்., ஒப்பந்த தொழிலாளர்கள் போனஸ் கேட்டு வேலை நிறுத்தம்

ஜி.எச்., ஒப்பந்த தொழிலாளர்கள் போனஸ் கேட்டு வேலை நிறுத்தம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள், தீபாவளி போனஸ் மற்றும் குறைக்கப்பட்ட சம்பளம் கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம், ஹவுஸ் கீப்பிங், துாய்மைப்பணி, பாதுகாவல் பணியில், 230க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்கின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை ஒப்பந்த நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை வழங்கும். அந்நிறுவனம், பணியாளர்களின் வங்கி கணக்கில் சம்பளத்தை வழங்கும். கடந்த மாதத்துக்கான சம்பளம் பெரும்பாலான பணியாளர்களுக்கு குறைத்து வழங்கப்பட்டது. இதுபற்றி கேட்டபோது முறையான பதில் கூறவில்லை. இந்நிலையில், தீபாவளிக்கான போனஸ், 7,000 ரூபாய் வழங்குவதாக ஒப்பந்தத்தில் தெரிவித்திருந்தனர். ஆனால் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து ஏழு மாதங்களே ஆனதால், 3,500 ரூபாய் முதல், 4,000 ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டும். இதிலும் குறைவான தொகையை வழங்கியதால், அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள், நேற்று காலை, 7:00 மணிக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, ஒப்பந்த நிறுவன அதிகாரிகளை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வார்டுகளில் சுத்தம் செய்யும் பணி பாதித்தது.ஒப்பந்த நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி, நிர்வாகத்திடம் பேசி, பிடித்தம் செய்த சம்பள தொகை, முழு போனஸ் தொகை வழங்குவதாக உறுதி கூறிய பின்னரே, 11:45 மணிக்கு மேல் அனைவரும் பணிக்கு திரும்பினர். ஓவர் குடியால் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு ஈரோடு, நவ. 8ஈரோடு அசோகபுரம் சுக்ரமணிய வலசு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன், 47, கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார். தன் வீட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு அசோபுரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று மதியம் நடந்து சென்றவர் மயங்கி விழுந்தார். மது போதையில் கிடப்பதாக மக்கள் நினைத்தனர். நீண்ட நேரமாக அசைவின்றி கிடந்ததால், கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் சென்று பார்த்து விட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் பரிசோதனையில் இறந்தது உறுதி செய்யப்பட்டது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை