உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டால் வியாபாரம் டல்

டால் வியாபாரம் டல்

கோபி, கோபி அருகே மொடச்சூரில் நேற்று கூடிய வாரச்சந்தையில், துவரம் பருப்பு (கிலோ), 180 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் குண்டு உளுந்து, 140 ரூபாய், பச்சை பயிர் மற்றும் பாசிப்பருப்பு, தலா, 130 ரூபாய்க்கும், கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை, மல்லி, தலா 110 ரூபாய்க்கும், கடுகு மற்றும் வெந்தயம், தலா 100 ரூபாய்க்கும், சீரகம், 350, கொள்ளு, 90, வரமிளகாய், 200, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 120, புளி, 100, மிளகு, 850 ரூபாய்க்கும் விற்பனையானது. கோவில் பண்டிகை, சுபமுகூர்த்தம் இல்லாததால், பருப்பு மற்றும் பயிர் ரகங்களின் வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை