உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 1.40 லட்சம் மீன் குஞ்சுகளை ஏரி, குளங்களில் விட முடிவு

1.40 லட்சம் மீன் குஞ்சுகளை ஏரி, குளங்களில் விட முடிவு

1.40 லட்சம் மீன் குஞ்சுகளைஏரி, குளங்களில் விட முடிவுஈரோடு, செப். 14-ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் 1.40 லட்சம் மீன் குஞ்சுகளை விட, மீன் வளர்ச்சி துறை முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மீன் வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: பவானிசாகர் அணைப்பகுதியிலுள்ள மீன் நாற்றங்கால் மூலம் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகளை, ஈரோடு மாவட்டத்திலுள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரி, குளங்களில் விட்டு மீன் வளர்ப்பை அதிகப்படுத்த மீன் வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது. பத்து மாதங்கள் வரை நீர் வற்றாத ஏரி, குளங்களை தேர்வு செய்து, ஒரு ஹெக்டருக்கு, 2,000 மீன் குஞ்சுகள் வீதம், ஒரு லட்சத்து, 40 ஆயிரம் மீன் குஞ்சுகளை விட திட்டமிட்டுள்ளோம். இதில், 20 சதவீதம் வரை உயிரிழந்தாலும், 80 சதவீத மீன்கள் வளர்ச்சி பெறும்.மீன் குஞ்சுகள் விடப்படும் ஏரி, குளங்களை ஊராட்சி நிர்வாகங்கள் கண்காணித்து, வளர்ந்த மீன்களை ஊராட்சி நிர்வாகமே ஏலம் விட்டு வருவாய் ஈட்டிக் கொள்ளலாம். மீன் வளர்ச்சி துறையை பொறுத்தவரை நீர்நிலைகளில் மீன் குஞ்சுகளை விடுவதும், நீர்நிலைகளில், 10 மாதங்களுக்கு குறையாமல் நீர் இருப்பை உறுதி செய்வதும்தான் முக்கியப் பணியாகும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ