உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

போலீசாரே போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

காங்கேயம்: காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுண்டானா சிக்னல் உள்ளது. இதன் அருகருகே காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், மகளிர் போலீஸ் ஸ்டேசன், யூனியன் அலுவலகம், நீதிமன்றம் என பல அரசு அலுவலகம் உள்ளது. இதனால் இப்ப-குதியில் எந்நேரமும் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்நிலையில் விபத்தினால் சிக்கும் வாகனங்கள், வழக்குகளால் பறிமுதல் செய்யும் வாகனங்கள் என நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை, மக்கள் நடந்து செல்லும் பாதையை மறித்து, காங்-கோயம் போலீசார் பல மாதங்களாக நிறுத்தியுள்ளனர்.இதனால் தாராபுரம், காங்கேயம் ரோட்டில் வரும் வாகனங்கள், ரவுண்டானா பகுதி சிக்னலை, சிரமத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், அவ்-வப்போது சிறு சிறு விபத்தும் நடக்கிறது. மக்களுக்கு உதாரண-மாக இருக்க வேண்டிய போலீசாரே, போக்குவரத்து மற்றும் மக்களுக்கு இடையூறாக இருப்பது, தெரியுமா அல்லது தெரி-யாதா? என்று, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ