உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

ஈரோடு:ஈரோடு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில், ஈரோட்டில் மாவட்ட கவுன்சில் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பேரவை செயலர் வினோத்குமார், கோரிக்கை குறித்து பேசினார். கடந்த, 2025 நவ., 2ல் அறிவிக்கப்பட்ட மத்திய தொழிலாளர் விரோத நான்கு புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள், 2026 மே மாத அறிவிப்பு விதிகளை திரும்ப பெற வேண்டும்.நிரந்தர வேலைவாய்ப்பை முற்றிலும் ஒழிக்கும் குறுகிய கால வேலைவாய்ப்பு முறையை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலை, வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சங்கங்களை பதிவு செய்வதையும், அங்கீகரிப்பதை கடினமாக்கும் போக்கை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்கள், அங்கன்வாடி, ஆஷா, பகுதி நேர திட்ட பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் இணைந்த குறைந்த பட்ச மாத ஊதியம், 26,000 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !