உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு

முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்தால் பரபரப்பு

கோபி: முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் தீ விபத்து நடந்ததால், கோபி அருகே நேற்று பரபரப்பு ஏற்பட்டது.கோபி அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் அருண்ரங்கராஜ், 38. இவரது வீட்டில் நேற்று மதியம் 2:00 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் அவரது வீட்டின் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அருண்ரங்கராஜை பத்திர-மாக மீட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்-தனர். அருண் ரங்கராஜ், கர்நாடகா மாநிலத்தில், முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர் என போலீசார் விசார-ணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ