| ADDED : ஜூலை 26, 2024 02:48 AM
ஈரோடு: மத்திய அரசின் பெண் குழந்தைகளை பாதுகாப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில், அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிக-ளுக்கு, எளிய அறிவியல் செயல் விளக்க நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு பங்கேற்றனர். பெர்னாலியின் துப்பாக்கி, காற்றில் மிதக்கும் பந்து, மைய விலக்கு விசை பலகை, தர்பூசணி வெடிப்பு, திரவ நைட்ரஜன் சிதறல், பியூட்டேன் ராக்கெட், அசிட்டோன் ராக்கெட், காற்றழுத்த பீரங்கி, யானை பற்பசை உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஈரோடு, பெருந்துறை, பவானி, சென்னிமலை பகுதிகளை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.இதேபோல் இன்று பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இதில் சத்தி, கோபி, நம்பியூர், டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த, 300 மாணவிகள் பங்கேற்க-வுள்ளனர்.