மேலும் செய்திகள்
கோழிப்பண்ணையில் தீ ரூ.14.5௦ லட்சம் சேதம்
19-Jan-2025
கோபி : கோபியில் நாயக்கன்காடு குப்பை கிடங்கு வளாகத்தில், நுண் உரம் செயலாக்க மையத்தில், நகராட்சி சார்பில் குப்பையை மக்க வைத்து, அரைத்து உரமாக தயாரிக்கப்படுகிறது. அதன் அருகேயுள்ள கூடாரத்தில், மறுசுழற்சிக்கு உதவாத குப்பையை எரிபொருள் உபயோகத்துக்காக பண்டல் செய்து இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஏழு டன் அளவுக்கு குப்பை இருந்தது. இதில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். இதில் பெரும்பாலான குப்பை, குப்பையை பேக்கிங் செய்ய பயன்படுத்தும் இரு கருவியும் எரிந்து நாசமாகி விட்டது. மின் கசிவால் தீ விபத்து நடந்திருக்கலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
19-Jan-2025