உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டெக்ஸ்டைல் பிராசஸர் பொதுக்குழு கூட்டம்

டெக்ஸ்டைல் பிராசஸர் பொதுக்குழு கூட்டம்

ஈரோடு:அசோசியேஷன் ஆப் ஆல் டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. சங்க தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் பழனிசாமி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வீரக்குமார் நிதியறிக்கை சமர்ப்பித்தார். சலவை தொழிற்சாலைகளுக்கு, எம்.இ.இ மற்றும் ஏ.டி.எப்.டி நிறுவ, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விலக்கு அளிக்க வேண்டும். டெக்ஸ்டைல் பிராசஸர்ஸ் தொழிற்சாலை மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் முருகானந்தம் வரவேற்றார். இணை செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி