உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்

கஞ்சா வழக்கில் ௨ பேர் மீது குண்டாஸ்

ஈரோடு: திருச்சி, பாண்டமங்கலம், முஸ்லிம் வீதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான், 48; கவுந்தப்பாடியில் பவா கல்யாண மண்டபம், சம்பளகாடு பகுதியில் வசிக்கிறார். இதேபோல் கடலுார், புலியூர் வசனன்குப்பம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சிவபிரகாசம், 48; கஞ்சா விற்ற இருவரையும் கோபி மதுவிலக்கு போலீசார் கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., ஜவகர் மூலம் கோபி மதுவிலக்கு போலீசார் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை