புதிய வழித்தடத்தில் மினி பஸ்; விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதன்படி ஈரோடு கிழக்கு ஆர்.டி.ஓ., அலுவலக பகுதியில் நடுப்பாளையம் அண்ணமார் கோவில் முதல் கொடுமுடி பஸ் ஸ்டாண்ட் வரை, காங்கேயம்பாளையம் - பேட்டை பள்ளிக்கூடம், கொளாநல்லி கோட்டை மாரியம்மன் கோவில் - சிவகிரி பஸ் ஸ்டாண்ட், எழுமாத்துார் - கொளாநல்லி மாரியம்மன் கோவில், அரச்சலுார் - வடபழனிக்குள் புதிய மினிபஸ் இயக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.இதேபோல் பெருந்துறை, கோபி, சத்தி, பவானி பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் மினிபஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கூடுதல் விபரத்தை அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அறியலாம். வரும், 15க்குள் விண்ணப்பம் பெறப்பட வேண்டும்.