உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.41 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்

ரூ.41 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்

கோபி: கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. நாட்டு சர்க்கரை, முதல் தரம்(திடம்), 60 கிலோவில், 3,050 ரூபாய் முதல், 3,060 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம்(மீடியம்), 2,850 ரூபாய் முதல், 2,960 ரூபாய் வரை ஏலம்போனது. வரத்தான, 1,401 நாட்டு சர்க்கரை மூட்டைகளும், 41 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. அதேபோல், உருண்டை வெல்லம், 50 மூட்டைகளில்(30 கிலோவில்) வரத்தானது. அவற்றில் ஒரு மூட்டை, 1,650 ரூபாய் என, 82 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 41.83 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ