உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டிஜிட்டல் லைப்ரரியில் மின் சாதனங்கள் பழுது விரைவில் சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை

டிஜிட்டல் லைப்ரரியில் மின் சாதனங்கள் பழுது விரைவில் சீரமைக்க வாசகர்கள் கோரிக்கை

'டிஜிட்டல் லைப்ரரி'யில் மின் சாதனங்கள் பழுதுவிரைவில் சீரமைக்க வாசகர்கள் கோரிக்கைஈரோடு, நவ. 6-ஈரோடு சம்பத் நகரில், டிஜிட்டல் நுாலகம் செயல்படுகிறது. போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அதிகம் உள்ளதால், போட்டி தேர்வுக்கு படிக்க இங்கு அதிக அளவில் வருகின்றனர். அக்.,30ல் நுாலகத்துக்கு வரும் மின் பாதையில் தடங்கல் ஏற்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அடுத்து, 31ம் தேதி, நவ., 1, 2, 3 விடுமுறை நாளானதால், மின் தடைக்கான காரணம், அதை சரி செய்வது குறித்த முடிவும் எடுக்காததால் சீராகவில்லை.கடந்த, 4ல் வந்த மின்வாரிய ஊழியர்கள், பிரதான மின் இணைப்பு, அதற்கான சாதனங்கள், சுவிட்ச்கள் உள்ள இடங்களில் பெரிய அளவில் பழுது ஏற்பட்டதால், உடனடியாக மின் இணைப்பு வழங்க இயலவில்லை என்றனர். இதனால் நேற்று வரை மின்சாரமின்றி நுாலகத்துக்கு வந்தோர் சிரமப்பட்டனர். விரைவில் சீரமைக்க, வாசகர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி நுாலக அலுவலர்கள் கூறியதாவது: மின்வாரியத்தினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தபோது, பெரும்பாலான மின் சாதனங்கள், ஒயர்களை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும் என்றனர். அதற்கான திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரித்து, நுாலக அலுவலரிடம் வழங்கினர். தொகை அதிகமாக உள்ளதால், உயரதிகாரிகள் ஒப்புதல் பெற்று, பணம் விடுவிக்க இயலும். அதன் பின்னரே, மின் இணைப்புகளை சரி செய்ய இயலும். ஓரிரு நாளில் சீராகும் எனத் தெரிகிறது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி