உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர் மன்ற பதவியேற்பு விழா

மாணவர் மன்ற பதவியேற்பு விழா

ஈரோடு: ஈரோடு வி.இ.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் மன்ற பதவியேற்பு விழா நடந்தது. கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதீஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், யு.பி.எஸ்.சி., -டி.என்.பி.எஸ்.சி., - எஸ்.எஸ்.சி., முதலான அரசு தேர்வுகளின் முக்கியத்துவம், பல்-வேறு மத்திய மாநில அரசுத் தேர்வுக்கு தயாராகும் முறைகளை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி கலந்துரையாடினார். கல்-லுாரி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி முதல்வர் நல்லசாமி, நிர்வாக அலுவலர் லோகேஸ்-குமார் வாழ்த்துரை வழங்கினர். சமூகவியல் துறைத்தலைவர் யாஷிர் அஸ்ரப், மாணவர் மன்ற நோக்கம் மற்றும் கொள்கை குறித்து விளக்கினார். பல்வேறு மாணவர்கள் மன்ற பொறுப்பு-களில் பதவியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை