மேலும் செய்திகள்
மொபட் திருடிய வாலிபர் கைது
08-Aug-2024
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரியவலசு, எஸ்.ஜி.வலசை சேர்ந்த ஆனந்தன் மனைவி கீதா. வீரப்பன்சத்திரம் போலீசில், கீதா அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கணவர், இரு மகன்கள் மற்றும் மாமியார் அங்கம்மாளுடன், 72. கூட்டு குடும்பமாக வசித்து வருகிறேன். நானும், கணவனும் விசைத்தறி பட்டறை தொழிலாளர். மகன்கள் பள்ளியில் படிக்கின்றனர். மாமியாருக்கு ரத்த அழுத்த நோய் உள்ளது. கடந்த, 30ல் மாமியார் மட்டும் வீட்டில் இருந்தார். மாலையில் முகத்தில் ரத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாமியார் மரணத்தில் சந்தேகம் உள்ளது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். வீரப்பன்சத்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
08-Aug-2024