மேலும் செய்திகள்
விவசாயியை தாக்கிய தம்பதி மீது வழக்கு
28-Oct-2024
கோபி, நவ. 9-கோபி அருகே தொழிலாளியை, கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.கோபி அருகே இருகாலுாரை சேர்ந்தவர் அய்யாவு, 57, விவசாய கூலி தொழிலாளி; நேற்று முன்தினம் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, 54, பாதையில் வேலி முட்களை போட்டு வைத்திருந்தார். இதை தட்டிக்கேட்ட அய்யாவை தகாத வார்த்தையால் திட்டியதுடன், தான் வைத்திருந்த கத்தியால் அய்யாவு இடது கையில் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கோபி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்த அய்யாவு அளித்த புகாரின்படி, கடத்துார் போலீசார் பழனிச்சாமியை நேற்று கைது செய்தனர்.
28-Oct-2024