உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விநாயகர் சிலைகள் இடமாற்றம் தீவிர கண்காணிப்பில் போலீசார்

விநாயகர் சிலைகள் இடமாற்றம் தீவிர கண்காணிப்பில் போலீசார்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்கப்பட உள்ளது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சிலைகளை கொண்டு சென்ற வண்ணம் உள்ளனர். இதை கண்காணிக்க கூடுதல் செக்போஸ்ட்களை போலீசார் அமைத்துள்ளனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: சிலைகளை கண்காணிக்க ஈரோடு நொய்யல், பழைய கோட்டை, பரிசல் துறை நால்ரோடு, மாதம்பாளையம், ராமபுரம், பகலாயூர், லட்சுமி நகர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 8 இடங்களில் புதிதாக செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து சிலைகள் எங்கு கொண்டு செல்லப்படுகிறது?. வாகனங்களில் ஆயுதம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லபடுகிறதா என்பது குறித்த விபரங்களை சேகரிப்பர். அரசு விதிமுறைகளின் படியே சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளனவா? என்பது கண்காணிக்கப்படும். இரு தினங்களாக புதிதாக அமைக்கப்பட்ட செக்போஸ்ட்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள, 10 செக்போஸ்ட்களில் உள்ள போலீசாரும் கூட விநாயகர் சிலை நடமாட்டம் குறித்த கண்காணிப்பர். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை